திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஆதரவு

காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன் !


- நளன்

புறக்கணிப்பு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை.

-சல்மா.

உண்மையாக நேசி.....

என் இதயம்
வெள்ளக் காகிதம் போல
அதில் எழுதியதை விட
கசக்கி எறிந்தவர்கள்தான் அதிகம் என்றேன்
நான் எழுதுகிறேன் என்றாய்
எழுதவும் செய்தாய்
உன் உணர்வுகளை, உளறல்களை
உன் தேடல்களை...
எனக்கே என்று எண்ணி
நான் அகந்தையுடன் இருந்தேன்
இப்போது தான் புரிந்தேன்
எனக்கில்லை என்று
அவனையாவது உண்மையாக நேசி.....