புதன், 18 நவம்பர், 2009

ஆராதனை

சாவ தெனில்நான் சாவேன் உன்றன்
சந்நி தானத்தில்அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில்

ஆரா தனையில் ஆருயிர் வாசனை
அழகுகள் சொரிந்தேனேதினமும்
பாரா யனமாய் உன் திருப் பெயரைப்
பாடித் திரிந்தேனே !

வேகம் குறைய வில்லை; மேலும்
வேதனை கூட்டாதேஎன்றன்
பாகம் பிரியா நாயகி யேஉன்
பக்தனை வாட்டாதே !

முன்போர் சமயம் தீண்டி யவன் என
முகத்தை வெறுக்காதேபொங்கும்
அன்போர் சமயமும் அடங்கா(து); உனைச்சரண்
அடைந்தேன் மறுக்காதே

தேவி, உனதருள் தேடிவந் தேன்; உயிர்த்
தீர்த்தம் கொடுப்பாயேஇல்லை
'பாவிஇவன்' எனப் பட்டால் எனை நீ
பலியாய் எடுப்பாயே !

சாவ தெனில் நான் சாவேன் உன்றன்
சந்நி தானத்தில் ங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில் !

- மீரா.

செவ்வாய், 17 நவம்பர், 2009

காதல் கீதம்

உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல் !

- நா.முத்துக்குமார்

காத்திருப்பு...

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம் !

- நா.முத்துக்குமார்

காதலித்து பார் !

காதலித்து பார் !

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்

காதலித்துப்பார் !



தலையணை நனைப்பாய்

மூன்று முறை
பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார் !



இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப் பார்!



சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே
அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே
அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே
அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்

காதலித்துப் பார்!

- கவிப்பேரரசு வைரமுத்து.

சனி, 14 நவம்பர், 2009

ஜனனமும் மரணனும்

முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்
அழகு படிந்ததை?

***********************************************

களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

காதலின் பயணம்

பாதமாகிறேன்.
பாதையாகிறாய்.
காதல் பயணிக்கிறது !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

என் எழுத்தில்
அடங்க மறுக்கும்
திமிரான கவிதை நீ!

***********************************************

என் காதலுக்கு
சிறப்பென்று சொல்லிக்கொள்ள
எதுவுமேயில்லை.
அது வெகு இயல்பானது,
என் சுவாசத்தைப் போல!

***********************************************

நீ பேசிய மொழியனைத்தும்
காதலின் தேசியமொழிதான்.

***********************************************

நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
அடர்ந்து கிடந்தது காதல்!

***********************************************

நாம் நடந்த பாதையில்
நான் மட்டும் நடக்கையில்
பிஞ்சுக்காற்று தோள்தொட
உன் விரலென்று திரும்பி
ஏமாந்திருக்கிறேன்!

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கடைசியில் நீ !

காலைவணக்கம்சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.

குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்
பள்ளிக்கூடம்
தமிழய்யா
தமிழ்
என்றும்,

தமிழை நினைத்ததும்
கவிதை
இலக்கியம்
திரைப்படம்
இசை
என்றும்,

இசையை நினைத்ததும்
இளையராஜா
எஸ்பிபி
எஸ்பிபி சரண்
சென்னை 28…
என்றும்,

சென்னையை நினைத்ததும்
வெயில்
கடல்
கடற்கரை
காதல்
என்றும்,

எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

காதலும் காட்சியும்

பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?

***********************************************

எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?

***********************************************

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

***********************************************

ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

***********************************************

என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
சண்டை போடலாமா?’ என்று கேட்டால்
சண்டையெல்லாம் கூடாதுஎன்று சண்டைக்கு வராமல்
அதற்கும்சரியென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

காதலும் கோபமும்

உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.


அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.


ஆனாலென்ன ?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான் !


ஊடலில் பிரிந்தாலும்
பேசாமல் மௌனித்தாலும்
கோபமாக முறைத்தாலும்
எனக்கு நீ நீ தான் !


துயரம் தானென்றாலும்
உன் கோபங்களை வரவேற்க
என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.


ஒரு மௌனம்
ஒரு மன்னிப்பு
ஒரு சின்னக் காதல்
எப்பொழுதும் இவை மட்டுமே
என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.


கோபங்கள் களையப்பட்டு
நிர்வாணமான உன் மனம்
காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :
இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா


அடிப்போடி...

உனக்கிருக்கும் காதலுக்கு
நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

காதல் தேடும் வாழ்த்து

கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென !

***********************************************

ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று !

***********************************************

என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ !

***********************************************

நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல
காதலில் தேடலும் சுகம்தான் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கவிதைக் காதல்

எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாதுஎன்கிறாய்.

எனக்கும்தான் !

***********************************************

கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன் !

***********************************************

கவிதையெழுதுவதில்
என் விரல்களை வென்றுவிடுகின்றன
உன் இதழ்கள் !

***********************************************

நீ கையொப்பமிட்டு தரும்
எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

காதல் செ(ய்)வ்வாய்

அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள் !

***********************************************

கண்ணில் முத்தமிட வந்தேன் !
இமை ()றித்துக்கொண்டது !!

***********************************************

ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய் !

***********************************************

கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும் ?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம் !

***********************************************

ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
லூசுகுட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம் !”

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

காதல் (திங்)கள்

நீ நினைக்கிறேன் !
நான் பேசுகிறாய் !
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும் ?

*********************************************

பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது !
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று !!

*********************************************

நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ !

*********************************************

குடையின்றி நீ வருகையில்
வெயிலுக்கும் மழைக்கும் சண்டை !

*********************************************

நீ நிலாச்சோறுண்ணும்
பௌர்ணமி இரவுகளில்
காதல் கள்ளுண்ணும்
நிலா !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

இல்லறம்

எனக்குப் படிப்பைக் கெடுப்பதாய்த் தோன்றும்…
தங்கைக்கு இசையை இடையூறு செய்வதாய்த் தோன்றும்…
அப்பாவுக்கு பூஜையையும், அம்மாவுக்குத் தூக்கத்தையும் தொல்லைப்படுத்துவதாய்த் தோன்றும்…

தாத்தாவுக்கு மட்டும் மருந்து கொண்டுபோகத் தோன்றும்…
படுக்கையில் பாட்டியின் இருமல் !


- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

நேசம்

செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

காதல் கணங்கள்

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன் !

இமைப்பது நீயெனில் !!

***********************************************

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி !

***********************************************

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
சில கவிதைகள் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

முத்தம்

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய் ?

முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா ?

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

மழைக்கால காதல் !

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ !

***********************************************

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

பணம்

* அம்மா மடித் தூக்கம்

* ஆற்றுக்குளியல்


*
குடும்பத்தோடு அரட்டை

*
நிலவொளி விளையாட்டு


*
சன்னலோரப் பேருந்து பயணம்

*
தங்கையோடு செல்லச் சண்டை


*
எதிர் வீட்டுப் பெண்

*
வீட்டுச்சாப்பாடு


எல்லாம் அனுபவித்த போது பணம் மட்டும் இல்லை !

இப்போது பணம் மட்டும் கிடைக்கிறது !!

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கவிதையும் காதலும்

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல் !

***********************************************

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன் !

***********************************************

தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன் ?

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com