புதன், 18 நவம்பர், 2009

ஆராதனை

சாவ தெனில்நான் சாவேன் உன்றன்
சந்நி தானத்தில்அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில்

ஆரா தனையில் ஆருயிர் வாசனை
அழகுகள் சொரிந்தேனேதினமும்
பாரா யனமாய் உன் திருப் பெயரைப்
பாடித் திரிந்தேனே !

வேகம் குறைய வில்லை; மேலும்
வேதனை கூட்டாதேஎன்றன்
பாகம் பிரியா நாயகி யேஉன்
பக்தனை வாட்டாதே !

முன்போர் சமயம் தீண்டி யவன் என
முகத்தை வெறுக்காதேபொங்கும்
அன்போர் சமயமும் அடங்கா(து); உனைச்சரண்
அடைந்தேன் மறுக்காதே

தேவி, உனதருள் தேடிவந் தேன்; உயிர்த்
தீர்த்தம் கொடுப்பாயேஇல்லை
'பாவிஇவன்' எனப் பட்டால் எனை நீ
பலியாய் எடுப்பாயே !

சாவ தெனில் நான் சாவேன் உன்றன்
சந்நி தானத்தில் ங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில் !

- மீரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக