செவ்வாய், 12 மே, 2009

ஏற்றநீர்ப் பாட்டு

மூங்கிலிலை மேலே

தூங்கும் பனிநீரே

தூங்கும் பனிநீரை

வாங்கு கதிரோனே

ஈச்சமண லோடை

இருபுறம் சம்போடை

தாழை மண லோடை

தனிப்புறம் சம்போடை

சம்போடைக் காட்டில்

சமத்தி கொலுவிருக்க

ஈப்புகுந்தால் இறகொடியும்

இண்டம் புதர்க்காடு

கொசுப் புகுந்தால் இறகொடியும்

கொங்கின் இளங்காடு

கரடி அலையும் வனம்

காட்டானை தூங்கும் வனம்

சிறுத்தை அலையும் வனம்

சிறுநரி தூங்கும் வனம்

ஓடிநிலம் பாய

ஒருபதியா லொண்ணு

1 கருத்து:

  1. ஐயா, இந்த பாடலை பல வருடங்களாக தேடிக்கொண்டிருந்தேன். காரணம் நான் 12வயது இருக்கும்போது எங்கள் ஊரில் எனது உறவினர் ஒருவர் ஏற்ற சால் பிடித்துக் கொண்டு பாட மேலே ஏற்றம் ஓடுபவர் எதிர்பாட்டு பாட தென்னை மரத்தோப்பிற்கு தண்ணீர் இறைப்பார்கள், இறைத்து முடித்துவிட்டு 200 சால் 300 சால் என்று பேசிக்கொள்வார்கள். அவர்களில் யாரும் இப்போது இல்லை எனக்கோ 65வயதாகிறது.அந்த பாடல்களில் கணக்கு ஒளிந்திருக்கிறது என்பது மட்டும் தெரியும். ஆனால் அந்த பாடல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சினிமா பாடலில் முதல் இரண்டுவரி மட்டுமே இருக்கும் இன்று ஒரு 10வரி பாடலை கண்டு மகிழ்ந்தேன். முழு பாடலும் இருந்தால் பதிவிடுங்கள், அவை நம் பொக்கிஷங்கள். எண்ணிக்கையையும் இசையாக செய்த நம் முன்னோர்கள்.

    பதிலளிநீக்கு