வெள்ளி, 22 மே, 2009

எங்கேயாவது

‘வீடாவா கிடக்கிறது,
விரித்து வைத்த புத்தகத்துள்
இன்னொரு புத்தகமா.

இதென்ன கம்ப இராமாயணத்துள்
திருக்குறள் புத்தகம் ?
கவிதை எங்கேயாவது கவிதை படிக்குமா ? . . .’


-படபடத்துக் கொண்டே பொரிந்து தள்ளி
ஒழுங்கு செய்கிறாய் நீ !

நானோ பேச்சை மாற்றுகிறேன்.

இதோ இன்று எழுதிய கவிதை
படித்தாயா ? – என.
‘புத்தம் புதுக் கவிதையா கொண்டா கொண்டா . .’

எனப் பரபரக்கிறாய், வாசித்து இரசிக்கிறாய்

இப்போது
நீ கேட்ட கேள்விக்குப் இதோ என பதில் . . .
கவிதை கூடக் கவிதையைப் படிக்கும்தான் . . .!

- மகுடதீபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக