வெள்ளி, 22 மே, 2009

பாஸ்கரின் கைவண்ணங்கள்

சாதி ஒழி
கண்மூடித் தனமாக செயல்படுவது
உனக்குப் புதிதல்ல.
ஒரு முறை
கண்மூடித் தனமாக
சாதியை எதிர்த்துப் பார்.


அமைதி
ஏனோ உனைக்
கண்டதும் சொற்கள்
உள்ளிருப்புப் போராட்டம்
நடத்துகின்றன,
சுய நினைவு
வெளிநடப்பு போராட்டம்
நடத்துகின்றது.


பிறப்பு
நீ பறித்தால்
பூ இறப்பதில்லை
பிறக்கிறது.


பூந்தோட்டம்
அழகுக் குறிப்புகளின்
அனிவகுப்புகளாக பூத்திருக்கிறது
என் பூந்தோட்டம்.

நிஜம்
ஓசைகள் அற்று
கனவுப் பள்ளத்தாக்கில்
கரைய மறுத்த ஒலியில்
சப்தமாகின்றன நிஜங்கள்
ஓசைகள் அற்று


பயணம்
சூரியனை நோக்கித்தான்
எனது பயணம்
நிலவில் தங்கியது
நிரந்திரமாக அல்ல
விடைபெறுவதற்குத்தான்.


பிரிவு
நீ அன்று இருந்தாய்...
கவிதை எழுதி
முற்றுப்புள்ளி வைத்தேன்.
நீ இன்று இல்லை...
கவிதையெதுவும் இன்றி
முற்றுப் புள்ளி வைக்கிறேன்,
கோலங்கள் இல்லாத
புள்ளிகளாய் பக்கங்கள்.


மௌனம்
வரம் வாங்குவதற்கான
வார்த்தைகளின்
தியானம்

வாழ்க்கை
வாழ்க்கை கடுமையானது.
ஆனால்
நாம் அதைவிடக் கடினைமானவர்கள்
- நன்றி : http://murugadas.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக