திங்கள், 11 மே, 2009

அப்துல்ரகுமான் கவிதைகள்

என் சிதைச் சாம்பலில்
நீ எப்படி மலர்ந்தாய்?


'பந்த்' அன்று
திறந்திருக்கும்
தேநீர்க் கடை நீ


தீபமரத்தின்
தீக்கனி உன்ன
விட்டில் வந்தது
கனியோ
விட்டிலை உண்டது


செல்வத்திற்குத் தாலி கட்டுகிறாய்
அதுவோ சோரம் போகக் கூடியது


உதிர்ந்த சருகு
மீண்டும் கிளையில்
குருவிக் கூடு


நானிலிருந்து நீ வந்தது
நாயகன் நாயகி கதை வந்தது
தேனிலிருந்து பூ வந்தது
தேனியைப் பருக வா என்றது


பேனாக்களே
கிரீடங்களைக் கழற்றிவிட்டு
தலைகுனியுங்கள்
நீங்கள் இருப்பது
டால்களுக்காக
பைகளுக்காக அல்ல!


இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்
- கவிக்கோ அப்துல்ரகுமான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக