செவ்வாய், 26 மே, 2009

அன்பிற்கு வரைமுறை வகுக்காதீர்கள்


துன்பத்தையும் மகிழ்ச்சியாக்குவோமே !


நல்லவை தீயவை உலகை பிளப்பவை !


சத்குருவின் பொன்மொழிகள்
அடிப்படை காரணம் எது?


செயலின் தேவைக்கேற்ப செயல்படுங்கள்


குழந்தைகளை வளர்ப்பது எப்படி?


யோக அறிவியல் தெரியுமா?


பிரம்மச்சரியம் அவசியமா?


சுமையை இறக்கி வையுங்கள்


விரும்பியவண்ணம் வாழ்க்கை


செயலில் சிக்காதீர்கள்


கடவுள் எப்போதும் பதிலளிக்கிறார்


நேசத்தை இழந்தால் நரகம்


ஜாதகங்கள் உண்மையா?


யோகா என்றால் என்ன?


சகிப்புத்தன்மையும் அவசியம்


வேண்டுவன

புத்தகத்தை
புரட்டாத தென்றல்;
காலாவதியான
பௌர்ணமி நிலவு;
சிதறிய விண்மீன்கள்;
தூரத்து மரங்கள்;
கண்ணாடி மௌனம்;
கற்புள்ள(genuine) தனிமை;
சில கவிதை
புத்தகங்கள்
கொஞ்சம் சோகம்
இது போதும் எனக்கு
- நன்றி : http://sravichandra.blogspot.com

வேண்டுவன

புத்தகத்தை
புரட்டாத தென்றல்;
காலாவதியான
பௌர்ணமி நிலவு;
சிதறிய விண்மீன்கள்;
தூரத்து மரங்கள்;
கண்ணாடி மௌனம்;
கற்புள்ள(genuine) தனிமை;
சில கவிதை
புத்தகங்கள்
கொஞ்சம் சோகம்
இது போதும் எனக்கு
- நன்றி : http://sravichandra.blogspot.com

குட்நைட்

அவள் நேற்று இரவு
"குட்நைட்"
என்றுதான்
சொன்னாள்;
என்னால்தான்
இரவு முழுவதும்
தூங்கமுடியவில்லை.
- நன்றி : http://sravichandra.blogspot.com

எங்க ஊருக் கதையொன்னு …

அய்யாமாரே அம்மாமாரே
எல்லாந்த் தெரிஞ்ச ராசாமாரே
கொஞ்ச நேரம் நில்லுங்க …
எம்முன்னால இல்லாத
என்னாச அவரோட
கடைசியா நாம்பேசும்
இந்தப் புழுதி மேட்டுக் காதலோட
மொத்தக் கதையும் கேட்டுப்புட்டு
எந்தப்பு இதில் என்னன்னு
எதாச்சும் தெரிஞ்சதுன்னா
எங்கிட்ட சொல்லுங்க.....


எல்லாப் பெண்டுக போலவே நானும்
எட்டுப்புள்ளிக் கோலம் போட்டும்
தாயமாடக் கோடு போட்டும்
ஒத்தக் காலில் நொண்டி ஆடி
கண்ணக் கட்டிப் பாண்டி பாடி
சந்தோசமாத் தான இருந்தேன்.....


எப்ப ஒன்னப் பாத்தேனோ
அப்பவே நான் தொலைஞ்சு போனேன்
உள்ளுக்குள்ள செவந்து போனேன்.....
- நன்றி : http://www.rejovasan.com

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள் அழகானவை
எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன
யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ
அவர்களைத் தவிர.....

- நன்றி : http://www.rejovasan.com

இளமையில் கல் ???

தவறுதலாகக் கொட்டிவிட்ட
தீக்குச்சிகளை
மீண்டும் அடுக்க நேர்கையில் எல்லாம்
பசைவாசம் ஆறாத குச்சிகளில்
ஆங்காங்கே தோன்றி
இடறிவிடுகின்றன
பல்பக்குச்சிகளின் சுவடுகள் தேய்ந்து போன
பாலகனின் விரல் ரேகைகள்.
- நன்றி : http://www.rejovasan.com

முரண்பாடு

பிறக்கும் போதே
ஒட்டவைக்கப்பட்டிருந்தன
உன் உதட்டில் என் புன்னகைகளும்
என் கண்களில் உன் கண்ணீரும்…
- நன்றி : http://www.rejovasan.com

கை ஒங்குகின்றன கவிதைகள்

காதலிக்காவிட்டிருந்தால்
என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்
எண்ணும் போதே
அடிக்கக் கை ஒங்குகின்றன
உன்னைப் பற்றிய கவிதைகள்
!
- நன்றி : http://www.rejovasan.com

நதியாகிறேன்

எல்லா நதியின் பயணமும்
கடல் தேடியே
நதியாகிறேன் நானும்…
- நன்றி : http://www.rejovasan.com

பைத்தியக்காரர்கள்

வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்
பின்னொரு மாலையில்
மழை பெய்திருந்த பொழுது
நாங்கள்
பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்

அணிந்திருந்த உடையோ
முதுகின் மேல் பை கொண்டிருக்கும்
பொருட்கள் பற்றிய கவலையோ
தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ
இல்லை வேறெதோ ஒன்றோ
மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது !

- நன்றி : http://www.rejovasan.com

புதியதோர் கவிதை

உன்னை நினைவு கூறும்
அடையாளங்களைச் சந்திக்கும்
போதெல்லாம்
புதியதோர் கவிதையையும்
சந்திக்கிறேன் !
- நன்றி : http://www.rejovasan.com

என் தலைவிதி

எனக்கான தலைவிதி
உன் கண்களில் ஓடும்
ரேகைகளில் இருக்கிறது…
- நன்றி : http://www.rejovasan.com

ஆச்சர்யம் கொள்ளாதே !

ஜன்னல் திறந்ததும்
ஆச்சர்யம் கொள்ளாதே
வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து
வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..
- நன்றி : http://www.rejovasan.com

வெள்ளி, 22 மே, 2009

கவ்வேன் !

உள்ளங்கால் அழுக்கென்று
படித்துறைக்குள் கால்வைத்தேன்

மீன்கள் ஓடிவந்து கவ்வ
சுத்த மானது பாதம்.

அண்ணாந்து பகார்த்தால்
அட நீ !
உள்ளம் அழுக்காய் உளதே . . .!
என் செயலாம் ?

ஓவிய ஓர விழிக் கயலால்
ஒருதரமேனும் கவ்வேன் !

- மகுடதீபன்.

எதிலாவது

மார்கழிக் காலை
மண்டையிலே சில்லென்று சிறுகாற்றுத் தாக்க,
மாசில் வீணையும் பாடல்
மனசுக்கு இதமாகக் கேட்க . . .

வாளிவாளியாகச் குளிர்ந்தநீரை
வாரி இறைத்துக் குளித்தபோதும் சரி,

குதிநடை போட்டுக் கொட்டும்
குற்றாலப் பெருக்கில் திளைத்தபோதும் சரி,

குளிர் வாசஸ்தலமெங்கும்
குதித்தோடி
வலம் வந்த போதும் சரி

வட்டவிழி சுழற்றி
வருடிவிட அப்படியே
வளைத்து ஒரு பார்வை பார்ப்பாயே

அந்தக் குளிர் இதத்தை
இதில் எதிலாவது
அனுபவித்திருக்கிறேனா நான் ?

- மகுடதீபன்.

எங்கேயாவது

‘வீடாவா கிடக்கிறது,
விரித்து வைத்த புத்தகத்துள்
இன்னொரு புத்தகமா.

இதென்ன கம்ப இராமாயணத்துள்
திருக்குறள் புத்தகம் ?
கவிதை எங்கேயாவது கவிதை படிக்குமா ? . . .’


-படபடத்துக் கொண்டே பொரிந்து தள்ளி
ஒழுங்கு செய்கிறாய் நீ !

நானோ பேச்சை மாற்றுகிறேன்.

இதோ இன்று எழுதிய கவிதை
படித்தாயா ? – என.
‘புத்தம் புதுக் கவிதையா கொண்டா கொண்டா . .’

எனப் பரபரக்கிறாய், வாசித்து இரசிக்கிறாய்

இப்போது
நீ கேட்ட கேள்விக்குப் இதோ என பதில் . . .
கவிதை கூடக் கவிதையைப் படிக்கும்தான் . . .!

- மகுடதீபன்.

ஆதலால்

நீ படித்துப்
பரிசு தந்த கவிதைப் புத்தகம்

ஏன் இனிக்கிறது விசேஷமாய் ?

புதுப் பிரதியின்
ஒட்டிய பக்கம் பிரிக்கப்

பனிமொழி நின் வாய் ஈரம்
பட்டிருக்கும் ஆதலால் . . .!

- மகுடதீபன்.

அறிவியல் கவிதை

நான் ஹைட்ரோ குளோரிக் அமிலம்
நீ அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு
என்றேன்.

எப்படியாம் ?

நாம்
நெருங்கினால்

நம்மைச் சுற்றி
எவ்வளவு புகைகிறது பார் . . .!

- மகுடதீபன்.

இரண்டும், இருநூற்றி நாற்பத்தேழும்

வெறும் 247
எழுத்துக்களை வைத்து

விதம் விதமாகத் துள்ளிக் குதிக்கும்
வித்தாரக் கவி எழுத

எப்படியாம் முடிகிறது உங்களால் ? -
என வியந்து போகிறாய் . . .

எப்படி, எப்படி . . .?

தா . . . தை . . .
என வெறும்
இரண்டு எழுத்தை மட்டுமே வைத்துக்
குதிக்கும் நின்
பாதங்களை விடவா ?

- மகுடதீபன்.

இடைபட்டவள் நீ.....

நிழலுக்கும் நிஜதிற்கும்
இடைபட்டவள் நீ

கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ

கடல் நுரைக்கும் காற்றிற்கும்
இடைபட்டவள் நீ

தோழிக்கும் காதலிக்கும்
இடைபட்டவள் நீ

இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே....

- நன்றி : http://iniyathutamil.blogspot.com

மௌனம்

மழையின் மௌனம் - அவள்
விழியின் மௌனம்

வானவில்லின் மௌனம் - அவள்
புன்னகையின் மௌனம்

காற்றின் மௌனம் - அவள்
சலனத்தின் மௌனம்

மின்னலின் மௌனம் - அவள்
சீண்டலின் மௌனம்

மௌனம் - அவள்
ஒரு புயலின் மெளனம்

- நன்றி : http://iniyathutamil.blogspot.com

இலையுதிர்காலம்

வேர்கள்
வெளியில்
தெரிவது போல்
மரங்கள்
வெறுமை கொள்ளும்
இலையுதிர்காலம் !
- செழியன்.

கடிகாரம்

இரண்டு முட்கள் -
அவர்களுக்குள் ஒட்டப்பந்தயம்,
உனது அழைப்பு வந்ததும்
அவர்களுக்குள் கண்ணாமூச்சியாட்டம்.
- நன்றி : http://iniyathutamil.blogspot.com

போர்

என்னக்குள்ளே போர்
வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
ஆனால், இறுதியில்
மடிந்து மண்ணாவது நான்.
- நன்றி : http://iniyathutamil.blogspot.com

வெற்றிடம்

உனக்கென்று
மாற்றி வைத்த
பொழுதுகளில்
நீயில்லை.
- நன்றி : http://iniyathutamil.blogspot.com

பாஸ்கரின் கைவண்ணங்கள்

சாதி ஒழி
கண்மூடித் தனமாக செயல்படுவது
உனக்குப் புதிதல்ல.
ஒரு முறை
கண்மூடித் தனமாக
சாதியை எதிர்த்துப் பார்.


அமைதி
ஏனோ உனைக்
கண்டதும் சொற்கள்
உள்ளிருப்புப் போராட்டம்
நடத்துகின்றன,
சுய நினைவு
வெளிநடப்பு போராட்டம்
நடத்துகின்றது.


பிறப்பு
நீ பறித்தால்
பூ இறப்பதில்லை
பிறக்கிறது.


பூந்தோட்டம்
அழகுக் குறிப்புகளின்
அனிவகுப்புகளாக பூத்திருக்கிறது
என் பூந்தோட்டம்.

நிஜம்
ஓசைகள் அற்று
கனவுப் பள்ளத்தாக்கில்
கரைய மறுத்த ஒலியில்
சப்தமாகின்றன நிஜங்கள்
ஓசைகள் அற்று


பயணம்
சூரியனை நோக்கித்தான்
எனது பயணம்
நிலவில் தங்கியது
நிரந்திரமாக அல்ல
விடைபெறுவதற்குத்தான்.


பிரிவு
நீ அன்று இருந்தாய்...
கவிதை எழுதி
முற்றுப்புள்ளி வைத்தேன்.
நீ இன்று இல்லை...
கவிதையெதுவும் இன்றி
முற்றுப் புள்ளி வைக்கிறேன்,
கோலங்கள் இல்லாத
புள்ளிகளாய் பக்கங்கள்.


மௌனம்
வரம் வாங்குவதற்கான
வார்த்தைகளின்
தியானம்

வாழ்க்கை
வாழ்க்கை கடுமையானது.
ஆனால்
நாம் அதைவிடக் கடினைமானவர்கள்
- நன்றி : http://murugadas.blogspot.com

கவிதைகள் சில.....

தவம்
நடந்து கொண்டே இரு
நதி போல
நான் காத்திருப்பேன்
ஓரிடத்தில்
கடலாக


பயணம்
பாதை எதுவெனத் தெரியாதாயினும்
தொடருமென் பயணம்
முடிவிலி நோக்கி....

தேடல்
கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லாரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை.


கவனம்
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்க விடவில்லை
சில்லறை பாக்கி


நட்பு
உன் நட்பை நேசித்தபின்
உன்னைப் பார்க்கும்போது
புன்னகை செய்யும்
என் இதழ்களை விட…
உன்னைக் காணாதபோது
கண்ணீர் சிந்தும்
என் கண்களையே
நேசிக்கிறேன்.

தோற்ற மயக்கம்
துல்லிய நீர்ப்பரப்பில்
துறவி போல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத்தானே தெரியும்
கொக்கின் குருரம்
- நன்றி : http://murugadas.blogspot.com

செவ்வாய், 12 மே, 2009

ஏற்றநீர்ப் பாட்டு

மூங்கிலிலை மேலே

தூங்கும் பனிநீரே

தூங்கும் பனிநீரை

வாங்கு கதிரோனே

ஈச்சமண லோடை

இருபுறம் சம்போடை

தாழை மண லோடை

தனிப்புறம் சம்போடை

சம்போடைக் காட்டில்

சமத்தி கொலுவிருக்க

ஈப்புகுந்தால் இறகொடியும்

இண்டம் புதர்க்காடு

கொசுப் புகுந்தால் இறகொடியும்

கொங்கின் இளங்காடு

கரடி அலையும் வனம்

காட்டானை தூங்கும் வனம்

சிறுத்தை அலையும் வனம்

சிறுநரி தூங்கும் வனம்

ஓடிநிலம் பாய

ஒருபதியா லொண்ணு

செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் !

எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்
- பாரதிதாசன்.

குக்கூ

கூடல் நகரில்
கூட்டம்
கூட்டம் கூட்டம்
கூட்டம் கூட்டம் கூட்டம்
கூட்டம் பார்க்க


நகர்க்கரம் தீண்டும்
கிராமத்து வயல்களில்
காணோம் செந்நெல்
முளைத்துள்ள தெங்கும்
வெள்ளையடித்த
முக்காலடிக்கல்
- மீரா.

சென்ரியு

மழைநாள் கவலை
காளான்களை எண்ணுவதா?
கட்சிகளை எண்ணுவதா?


ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள்


சட்டம் ஒழுங்கை
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்


பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்
- ஈரோடு தமிழன்பன்.

ஹைகூ

எரியும் பிணங்கள்
வெட்டியான் வீட்டில்
சமையல்

- அமுதபாரதி.

பசித்த குழந்தைகள்
காஞ்சி காச்சுவான் தந்தை
சுவரொட்டிகள் ஒட்ட

- மித்ரா.

விசிறி வியாபாரி
காற்றைச் சுமந்து செல்கிறான்
வேர்க்க வேர்க்கத்தான்

- ஷிகி.

பெண் வாழ்க்கை

மறுபடி மறுபடிக்
கழுவி மெழுகி
மறுபடி மறுபடி
சமைத்து சமைத்து
மறுபடி மறுபடி
சுமந்து தளர்ந்து
மறுபடி ஓடி
மறுபடி ஓய்ந்து
மகளே... என் மகளே
இதுவா என் வாழ்க்கை
- ஆண்டாள் பிரியதர்சினி.

பட்டாணி சாமி

முத்தால் ராவுத்தர்... என்று
மூச்சுக்கு மூச்சு
பெயர் வைக்க அவன் பெயரைப்
பெற்றோர்கள் கேட்டால்
என் பெயரைச் சொல்கிறான்
'பாட்டான்' சொல் மருவிப்
பட்டாணி ஆகிவிட்டேன்
மற்றபடி நான்
உப்புக்கடலையும் இல்லை !
பொட்டுக் கடலையும் இல்லை !
- பழமலாய்.

குப்பைத்தொட்டி

கருப்பு வளையல் கையுடன் ஒருத்தி
குனிந்து வளைந்து பெருக்கிப் போனால்
வாசல் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு
- கல்யாண்ஜி.

முரண்பாடு

நேற்றுவரை தூற்றியவர்கள்
நாளை முதல் போற்றுவார்கள்
இன்று அவன் இறந்துவிட்டான்
- கழனியூரான்.

1947 ஆகஸ்டு 15

அவன்
ஒரு
பட்டுவேட்டி பற்றிய
கனவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது
- கவிப்பேரரசு வைரமுத்து.

வாக்குப் பெட்டி

நாங்கள்
எண்களின் ஆடையற்றவருக்கு
ஒரு சட்டை தருகிற
ஒரு தையற்காரர் வேண்டி
இந்தப் பெட்டிக்குள்
சில நேர்த்தியான ஊசிகளைப்
போட்டோம்
நீ திறந்து எடுத்துக் கொண்ட போது
அவை எங்கள் உடைமைகள்
எல்லாம் பறித்து அடைதுக்க் கொள்ளும்
கோணி ஊசிகளாக மாறிவிட்டால்
பாவம் நீ என்ன செய்வாய்
- பாலா.

பெண்ணியம்

எங்கள் வாழ்க்கை
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது


பூக்களிலே நானும் ஒரு
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூ மாலை ஆகலியே
- மு. மேத்தா.

விலைமகளிர்

நாங்கள் நிர்வாணத்தை
விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக
- நா. காமராசன்.

தீக்குளிப்போம்

ஏழைகளின் அடுப்பெரிப்போம்
இல்லையெனில்
சூரியனில் தீக்குளிப்போம்
- நா. காமராசன்.

மாமன் மகள்

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்-
வாசுதேவ நல்லூர்...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப்பிள்ளைமார்
வகுப்புங்கூட...
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்-
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடைநெஞ்சம் தாம் கலந்தனவே
- மீரா.

இடையும் உடையும்

சங்கக்காலப் பெண்களுக்கு இடையே இல்லை
எங்கள் காலப் பெண்களுக்கு உடையே இல்லை !
- குருவிக்கரம்பை சண்முகம் (கவிஞர் செங்குயில்).

செவிலித்தாய்

நகம் வெட்டும் சாக்கில்
விரலயே வெட்டிவிட்ட
செவிலித்தாயிடம்
சிக்கிக் கொண்டாய் நீ
- தமிழ்நாடன்.

எங்கிருந்து வருகிறது இந்த நதி?

எங்கிருந்து வருகிறது
இந்த நதி?
மலைகளின்
மௌனம் உடைந்தா?
முகில்களின்
ஆடை கிழிந்தா?
வனங்கள் பேசிய
இரகசியங்கள் கசிந்தா?
இல்லை...
என்னிலிருந்து
என் அந்தரங்கங்களின்
ஊற்றுக்கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் ரத்தக்குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு
அங்கிருந்து வருகிறது
இந்த நதி
- சிற்பி.

திங்கள், 11 மே, 2009

நுகர்வோர்

ஃபேர் அண்ட் லவ்லி முகம்
கிளினிக் ப்ளஸ் கூந்தல்
லக்ஸ் பட்டு போன்ற சருமம்
ஐடெக்ஸ் கண்கள்
இமாமி இதழ்கள்
லக்மே நகங்கள்
லலிதாவின் ஆபரணங்கள்
நல்லியின் ஆடைகள்
சரவணாவின் சீர்வரிசைகள்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
உறவாடியதில்லை அவற்றுடன்
என்றாலும்
அவள் முன்னே
இராஜகுமாரர்கள்
பிரியாணிப் பொட்டலத்துடன்
தோன்றுகிறார்கள் பின்னிரவில்
வீதியோரம் அமர்ந்து
பேன்கள் உதிரும்
தலையைச் சொறிந்தபடி
தகரக்குவலையில் உருளும்
கூழாங்கல்லின் லயத்துடன்
பாடிக் கொண்டிருக்கிறாள்
பகலெல்லாம் பைத்தியக்காரி
- மாலதி மைத்ரி.

குடும்பக் கட்டுப்பாடு

அனாதைக் குழந்தைகள்
கடவுளின் குழந்தைகள் எனில்
முதலில்
கடவுளுக்குத் தான் செய்யவேண்டும்
குடும்பக் கட்டுப்பாடு

விஷச் சாறு

என் மீது உருண்டு திரண்ட
உன் பிரியத்தையே பிழிந்து தருகிறேன்
அது விஷச் சாராகவும் இருக்கலாம்
- சுகிர்தாராணி.

பயங்கள்

இன்று மறுபடியும்
ஒருமுறை
என்னைக் கண்ணாடியில் பார்க்கிறேன்
பிறர் பயப்படும்படியாகக்
குறிப்பாக நீ பயம் கொள்ளும்படியாக இல்லை
என் தோற்றம்
நான் தூங்கும் போதும்
அதைரியத்துடன் விழித்திருக்கிறாய்
இன்றும்
என்னை வீழ்த்திக் கொண்டிருப்பது
உன் வலிமையில்லை
உன் பயங்கள்
- சல்மா.

கீதா உபதேசம்

கீதா உபதேசம்
அற்புத காட்சிதான்
விரும்பி ரசிப்போம்
விலைக்கு வாங்கி
வீட்டில் சுவரில்
மாட்டி (மட்டும்) வைப்போம்
- பத்மாவதி தாயுமானவன்.

காந்தி - விற்ப்பனைக்கு !

வேதம் படித்திடுவோம்; வெறுங்கை முழம் போட்டிடுவோம்
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம் !
அத்தனைக்கும் மேலல்லோ அகிம்சை கதைபேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்

- புதுமைப்பித்தன் .

பல்லி விழும் பலன்

தலையில் நீ வந்து வீழ்ந்தால்
சண்டையாம், தோளில் வீழ்ந்தால்
நலம்பல பெருகும் என்பர்
நான் இதை நம்பவில்லை
இலர் பலர் இந்த நாட்டில்
எண்ணற்றோர் எனவே அன்னார்
வலப்புறத்தொளில் வீழிந்தே
வாழச்செய் எங்கே பார்ப்போம்
- சுரதா.

சேயாகுமா?

மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கோடா ஒரு நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீயாகுமா
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?

- கண்ணதாசன்.

வாரண மாயிரம்

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்

- ஆண்டாள்.

அன்பே சிவம்

அன்பும் சிவமும்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

- திருமூலர்.

அந்திப் பொழுது

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லிகனை தெரிந்து மெய்காப்ப - முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்தே
புன்மாலை அந்திப் பொழுது?

- புகழேந்தி.

வஞ்சமகள்

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி
அஞ்சொலிய மஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள்
வந்தாள்
- கம்பர்.

கண்டேன் சீதையை

இப்பிறப்பு என்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்

- கம்பர்.

மருத நிலம்

தண்டலை மயில்க லாடத் தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைக் கண்விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ

- கம்பர்.

வையை என்னும் பொய்யாக் குலக்கொடி

வையை என்னும் பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தானஅறிந் தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் சுரந்தனள் அடக்கி

- சிலம்பு.

மாதவியின் மடல்

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிவதற்கு, என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கட்டியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரைபோய்
போற்றி
- சிலம்பு.

நாணி கதவடைத்தேன்

ஆய் மணிப் பைம்பூண் அலங்கு தார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேருமென் நெஞ்சு

- முத்தொள்ளாயிரம்.

கண்ணிலும் முத்து விளையும்

இப்பீயின் றிட்ட எறிகதிர் நித்திலம்
கொற்க்கையே அல்ல படுவது - கொற்கைக்
குருதிவேல் மாறன் கிளிர் சாந் தகலங்
கருதியார் கண்ணும் படும்

- முத்தொள்ளாயிரம்.

பிரியா தன் தலைவன்

நின்ற சொல்லார் நீடுதோன் றினியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நந்நயந்து அருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்யறி யலரே

- நற்றிணை.

தலைவியைப் பிரியேன்

பட்டினப்பாலை
முட்டச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய,
வாரேன் வாழிய நெஞ்சை!
திருமா வளவன் தெய்வார்க்கு ஓங்கிய
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே!

- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

புறநானூற்றுத் துளிகள்

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

- புறம்(192).

பெரியோரை வியத்தலும் மிலமே
சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே

- புறம்(193).

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

- புறம்(42).

பாரி மகளிரின் நினைவலை

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடயேம்எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே
- புறநானூறு.

மாமத யானை

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்

- திருமூலர்.

மறுமலர்ச்சி

உதிந்து வீழ்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
வண்ணத்துப் பூச்சி
- மோரிடாகே.

அப்துல்ரகுமான் கவிதைகள்

என் சிதைச் சாம்பலில்
நீ எப்படி மலர்ந்தாய்?


'பந்த்' அன்று
திறந்திருக்கும்
தேநீர்க் கடை நீ


தீபமரத்தின்
தீக்கனி உன்ன
விட்டில் வந்தது
கனியோ
விட்டிலை உண்டது


செல்வத்திற்குத் தாலி கட்டுகிறாய்
அதுவோ சோரம் போகக் கூடியது


உதிர்ந்த சருகு
மீண்டும் கிளையில்
குருவிக் கூடு


நானிலிருந்து நீ வந்தது
நாயகன் நாயகி கதை வந்தது
தேனிலிருந்து பூ வந்தது
தேனியைப் பருக வா என்றது


பேனாக்களே
கிரீடங்களைக் கழற்றிவிட்டு
தலைகுனியுங்கள்
நீங்கள் இருப்பது
டால்களுக்காக
பைகளுக்காக அல்ல!


இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்
- கவிக்கோ அப்துல்ரகுமான்.

கேயாஸ் தியரி கவிதையில்

ஒரு சிறு பூவை
நீ அசைத்தால்
ஒரு நட்சத்திரம்
அணைந்து போகலாம்
- ஃபிரான்சிஸ் தாம்சன் .

ஏகத்தின் ரகசியம்

விதங்களில்
ஏகத்தின் ரகசியம்
மறைந்திருக்கிறது
மின்மினியில்
ஒளியாக இருப்பதே
மலர்களில்
மணமாக இருக்கிறது
- இக்பால்.

குறுந்தொகை

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளீர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்கன் தாம் கலந்தனவே

- செம்புலப்பெயநீரார்.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே

- கூடலூர் கிழார்.

அருளும் அன்பும் நீங்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே

- கோப்பெருஞ்சோழன் .

சனி, 9 மே, 2009

திருநங்கை பற்றிய திருநங்கையின் கவிதை !

- நன்றி : www.livingsmile.blogspot.com

கவிதை துளிகள் சில....

தமிழ் எம். ஏ படத்தின் அழைப்பிதழ்

புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை

கண்ணீர்

கண்ணீரை படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?


கொடுமை !

'கொடுமைகள் இருவகை
சொல்லால் வருவது செயலால் வருவது
ஆனால் இரண்டும் சேர்ந்தது
பல்லால் வருவது'
மேலும் படிக்க..
- நன்றி : நிலவன்
http://eerththathil.blogspot.com

சிறு கவிதைகள்

பொய்

காமம் என்றேன்
கயவன் என்றாய்
காதல் என்றேன்
கவிஞன் என்றாய்


நட்பு

ஊரார் சொல்லும் காதலை
ஒதுக்கி வைத்திவிட்டு
என் கண்களை மட்டுமே
பார்த்துப் பேசும் உன் உறவு...


விதவை

கனவுகளுக்கு வாசல் திறந்து
வண்ணங்களை உதிர்த்த
வெள்ளைப் புறா
- நன்றி : நிலவன்
http://eerththathil.blogspot.com

பட்டையை கிளப்பும் பாரதியின் வரிகள்

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ….


- மகாகவி பாரதியார்.

நவீன பாரதி எழுதியிருந்தால்( ஒரு முயற்சி தான்) ?!

தேடி பெண் ஆர்குட் பலசென்று - பல
மயக்கும் கதை பேசிஅவளைக் கவிழ்த்து - அவள்
மனம் வாட பலானவை பேசி - பிறர்
பார்க்க பற்பல சல்லாபம் செயமுயன்று - கடை
பல சென்று கடலைபேச வளித்து - இரை
தேடித் திரியும் தெருநாயினைப் போல் - பல
வாடிக்கை மனிதரைப் போல் - நான்
விழுந்து கிடப்பேனென்று நினைத்தாயோ......

- நன்றி : நிலவன்

http://eerththathil.blogspot.com

காதல் துளிகள் !

- நன்றி : நிலவன்
http://eerththathil.blogspot.com

என் உயிர் காதலியே!

என் உயிர் காதலியே...
நீ தூக்கி எறிந்த அனைத்தையும்
முடிந்தவரை சேகரித்து வைத்துள்ளேன்,

அதில்என் காதலுக்கு முதல் இடம்.

- நன்றி : நிலவன்
http://eerththathil.blogspot.com

அழகுத் தெய்வம்

மங்கியற்தோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 1

யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்;
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ’ என்றேன்;
‘இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்’ என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’ என்றேன்
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்.
விருப்புடனே பெய்குவது வேறாமோ?’ என்றாள். 2

‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’ என்றேன்
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’ என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’ என்றேன்;
‘நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்?’ என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’ என்றேன்.
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’ என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ?’ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

- பாரதியார்.

நந்தலாலா

காக்கச் சிறகினிலே
நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா;

பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா;


கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;

தீக்குள் விரலவத்தால்
நந்தலாலா -- நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.

- பாரதியார்.

கண்ணம்மா - என் குழந்தை

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
செல்வம் பிறிது முண்டோ?

- பாரதியார்.

புதிய ஆத்திசூடி

காப்பு
பரம்பொருள் வாழ்த்து

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக்
கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்வோம்.


நூல்

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்

ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளை
பல தாங்கேல்

கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்

கத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தோ¢ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளத்திடேல்
சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேலுல்
கைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்

சௌரியந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்

ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோ£¢க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்

தொன்மைக்கு அஞ்சேல்¢
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்

நினைப்படு முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்

நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு

பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்

பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்ம இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை

மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்து கொள்
முனயிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொ டேல்

மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவஞ்சொய்
மோனம் போற்று
மௌட்டியந் தனக்கொல்

யவனர்போல் முயற்சி கொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தோ¢ச்சி கொள்
ராஜஸம் பயில்

ரீதி தவறேல்
ருசிபல வென்றுணர்
ரூபஸ் செம்மைசெய்
ரேகையில் கனிகொள்
ரோதனம் தவிர்

ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் வுலகு
(உ)லுத்தரை இகழ்

(உ) லோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்துண்
வானநூற் பயிற்சிகொள்
விதையினைத் தெரிந்திடு

வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வெளவுதல் நீக்கு

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

பொய்சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா

- பாரதியார்.

சில கவிதை முயற்சிகள்

பெரும் வனப்புக்களை
காட்டி கூட்டி
கூட்டி காட்டியும்
செய்யும் மதர்ப்புகள்
ஏதும் அறியாமலே
செல்கிறது வாழ்க்கை
மிகத்தெளிவாக.

நோய் வந்துணர்த்தியது
ஒவ்வொருவரும்
தனித்
தனி
என

திறந்து கிடக்கு
உலகம்
நம்
முன் அனுமானங்கள்
எல்லாம்
சாவித்துவாரத்தின்
வழியாக.
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

இரண்டல்லாதது

பொய்-வாய்மையோடும்

இன்ப-துன்பத்தோடும்

சுக-துக்கத்தோடும்

பகலிரவோடும்

சந்திர-சூரியனோடும்

ஆண்-பெண்ணோடும்

இரண்டோடே வாழும்

அத்வைதமான வாழ்க்கையில்

இரண்டல்லாத பிரம்மம் தேடி

அத்வைதம் காணும் வழி

உண்மையோடு உறவாடும்

உன்னதமான வாழ்வென்ற

பால பாடம் கற்றுக்கொள்ள

ஆயுளில் பாதியானதே….

- நன்றி: வடிகால்

http://authoor.blogspot.com

கைகூடா தியானம்

குரங்கை நினையாது
மருந்தைக் குடியென்றார்
குப்பி திறக்குந்தோரும்
குரங்கின் நினைவு

உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது

விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

பின்நவீனத்துவ கவிதை?????

ஏதேதோ
குப்பைகளை
எழுதி கிழித்து பின்
கிழித்தும் எழுதி
கடைசியாய் பிறந்தது
உத்தமமான ஓர்
கவிதை
சுற்றும் முற்றும்
பார்த்தேன்
யார் எழுதியதென்று
அங்கு
நானும் கவிதையும்
மட்டுமே....
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

சில கவிதைகள்........

ஆதிக்கம்

குறிப்புகளுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
அடங்க மறுக்கும்
என் (உன்) இயலாமைகளுக்கு
மறைப்பாய் என் (உன்)ஆதிக்க
முகமூடிகள்

நொடியில் மரணம்

ஆயத்தங்களில்லாத புறப்பாடுகளில்
எனக்கு ஆர்வம் அதிகம்
எந்த கடைசி கணங்களின்
பரபரப்புமின்றி
விடைபெறுதல்களின் தொந்தரவுகளின்றி
யாருக்காகவும் எழுதாத வரிகளாய்
எதற்காகவும் காத்திராத
அந்த தனித்தன்மை மிகுந்த பயணங்களில்
எனக்கென்றுமே
ஆச்சரியம் அதிகம்

ரௌத்திரம் பழகு

ரௌத்ரத்தின் வேர்களுக்கு
என்றும் உயிருண்டு – ஆனாலும்
அதன் பாசன மதகுகளின்
தாழ்களுக்கு பெயர்களும் பலவுண்டு
காதல்,
அன்பு,
பொறுமை,
பணிவு
இன்னும் புதியதாய்..

”தேடல்”ஆனாலும்
ஆணிவேர்களை அசைத்துப்பார்த்து
பேருண்மைகளை வெளிக்கொணரும்
வெள்ளந்தி துரோகங்கள்
என் அத்தனை முகமூடிகளையும்
களவெடுத்து போகும்.
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

பால்ய நகரங்களின் மீதான என் மறுபார்வைகள்

மூளையின் ஞாபகக்குவியல்களில்
முகங்களுக்கான பெயர்களைத்
தேடித்தேடி அலைந்த வேளையில்
இருப்பின் தொடர்புகள் அறுந்துபோனது
நிஜங்களின் தொடர்பில்லாத
சுவடுகளின் மெய்யிருப்பு – என்
தேடுதல்களுக்கான வேட்கையில்
துணை செய்ய மறுத்தது
எழுத மறந்த கவிதைவரிகளில்
தொலந்துபோன உணர்வுகளாய்
தொடர்பில்லாத் தேடல்கள்
அர்த்தமற்றதானது
தேடல்களின் கணங்கள்
விடுபட்ட அந்நிமிடம் மட்டுமே
முழுமையாய்
இருப்புடன் ஒன்ற முடிந்தது
மீண்டும் புதியதாய்
என் ஞாபகத்தின்
வலைகள் – இம்முறை
பெயர்களோடோ – இல்லை
முகங்களோடோ இணையாது
வெறும் இருப்பினோடு மட்டுமே
இனி தொடர்புமை இல்லாத
என் தேடல் வழிகளில்
அவ்வப்போதய இருப்புகளே
சுவைகளாய்.
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

பெண்பால் கவிதைகள்

நட்பு

எப்போதும் போலுணர்ந்தேன்
இரு பத்து வருடங்கள்
பின்பும்
அம்மா,
மனைவி,
அதிகாரி
ஏதுமின்றி
நானாய்
நன்பனின்
எதிரில்

சுயநலம்

நல்லவேளை
எனை வசீகரிக்கும்
பித்தனோ
ஞானியோ
பைத்தியக்காரனோ
என்
கணவரோ
மகனோ
மருமகனோ
சோதரனோ
இல்லை

காதல்

இருமகவோடு
இரவு கதைசொல்லும் நேரம்
நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???

இயலாமை

பரிதாபங்களை
யாசித்தல்
கழிவிரக்கத்தை
தறுவதாயிருக்கிறது.
இயலாமைகளை
உரத்துச்சொல்வதை
தடுக்கிறது
சுயமரியாதை

நடப்பின்
இருப்புகளை
உதறவோ
உடைக்கவோ
முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

பெண்ணியம்

பெண்ணியம்
என்
போதையின்
முகச்சாயைகளை
வெளிக்கிட வைத்தது
என் புகழ் போதை
என்னை
எல்லாவற்றையும்
எழுதவைத்தது
காதல், காமம்
மற்றும் என்
தூமை உட்பட.

போதை

பிரஞ்ஞையற்று கிடக்குது
உலகம்
விழுந்து கிடக்கும்
குடிகாரனைப்போல
சுற்றிலும்
குப்பை கூளம்
அவமானம் ஆக்ரமிப்பு
அன்பு அலட்சியம்
துரோகம் நட்பு
மற்றும் காமம்.
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

முகமூடிக்கவிதைகள்

அழு
ஆவேசப்படு
அடங்கு
அடுத்த வேளை
சோற்றுக்காக
அனுசரித்துப்போ

நின்று சிரித்து
வெளுக்கும்
மானுடத்தின் சாயம்
மீண்டும் மீண்டும்
நுகரத்துடிக்கும்
பூவின் மணம் போல
எப்போதும்
பேசத்துடித்திருக்கும் மனது
எட்டிப்பார்த்து பின்
தட்டிக்கேட்டதும்
உள்ளடங்கிப்போகும்
உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ
ஆகலாம்.
ஆற்றொழுக்கின் இரு கரைகளுக்குண்டான
விகிதாசாரங்களில்
இறைந்து கிடக்கிறது வாழ்க்கை

'ம்' என்றோ
'இல்லை' என்றோ
மறுமொழிகளில்
கழிந்துபோகிறது
அன்றன்றைய நாட்கள்
வாழ்வை தேடவைக்கும்
சில சொற்கள்
ஆனால்
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை

முகமூடிகளின்
வாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்

வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்
ஜன்னல் கம்பிகளில்
சொருகிய
தீரைச்சீலையாய்
மனது சிக்கிக்கொள்கிறது
ஏதேனும் ஆழத்தில்

வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்
தவறாகப்புரிந்துகொள்ளப்படுமென்று
விழுங்கிய வார்த்தைகள்
விருட்சமானது
காய்களோ
கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.
நடைமேடை தூண்களுக்கு
இடயே
தெரியும்
விரைத்த கால்களும்
அதை சுற்றி நின்ற
கால்களில் இருந்த
தயக்கங்களூம்
தரும்
அச்சத்தை
தாண்டியும்
மனம்
நிம்மதித்தது
அவர்
நமக்கு
தெரிந்தவரில்லை
என்பதில்
வாழ்க்கை
மிகவும் சிக்கலாகித்தான்
போனது
வாழ்த்துக்களின்
தடமும்
புரிந்தபோது.
சமாதனங்கள்
ஆசுவாசங்கள்
இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கண்ணீர்
கவலை
இவைகளின் இடையே
இன்றைய சந்தோஷம்
இலக்கியம் புடலங்காய்
கவிதை கத்தரிக்காய்
கதை அவரைக்காய்
கட்டுரை வெண்டைக்காய்
இவையெதையும்
செய்தது நானில்லை
பின்னெப்படி
உப்புக்கும் சுவைக்கும்
நான் பொறுப்பு???
சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
போல
குறுக்கும் நெடுக்கும்
கோடுகள் ஏதுமின்றி
நீண்டு செல்கிறது
நெடுஞ்சாலையின்
மஞ்சள் கோடு
வாழ்க்கை
அதுபோலில்லை
அது போலியில்லை
நாய்களோ
பூனைகளோ
குதிரைகளோ
எனக்கு நெருக்கமில்லை
உருவகப்படுத்த
விலங்கினம் தேடினேன்
என்னுள்ளிருக்கும்
தாழ்திறவா
ஆரண்ய கதவுகளில்
“இடமில்லை” அட்டைகள்
பயணங்கள்
தன் இலக்குகளை
இன்றில்லாவிடினும்
நாளை அடையலாம்
சமரசங்களற்றபோது
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

கண்ணாடி

வெகு ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
இன்றைய நாட்களின்
மவுனத்தை
உடைத்தெறியவே
விரும்புகிறேன்...

ஆனாலும்
உள்நோக்கி பார்க்கவும்
உணர்ந்தறியவும்
ஏதோ உள்ளதென்ற
உந்துதலுக்கு
செவிசாய்த்து
என்னுள் ஆழ்கிறேன்
மிக நீண்ட தனிமையில்.

உன்னோடும் இருந்திருக்கிறேன் !

எப்போதும் கனவுகளில்
பார்த்தேயிராத தெருக்களில்
பயணித்திருக்கிறேன்

ஓட்டியே இராத கார்களின்
வட்டுவம் பிடித்து
மைல்கணக்காய்
காரோட்டியிருக்கிறேன்

பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்தினரோடு
நானும் பறவையாய்
பறந்திருக்கிறேன்

மிதந்து செல்லும்
ஆற்றின் சுழிகளில்
சுழன்று வீழ்ந்திருக்கிறேன்

தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்

அதோடு கூட
உன்னோடும் இருந்திருக்கிறேன் !

கண்ணம்மா என் காதலி - 1

சுட்டும்விழிச் சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்களடீ!

சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ! - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ! - இதுபார்,
கன்னத்து முத்தமொன்று!

- பாரதியார்.

வெள்ளி, 8 மே, 2009

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
- கண்ணதாசன்.

கண்ணம்மா என் காதலி - 6

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!


வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!


வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!


வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!


வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!


காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!


நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!


தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!

- பாரதியார்.

வியாழன், 7 மே, 2009

கண்ணம்மா என் காதலி - 5

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையிலே
செண்பகத் தோட்டத்திலே,

பார்ந்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!

மேனி கொதிக்குதுதடீ - தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!

வானிலிடத்தையெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!

மோனத்திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.

நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?

- பார'தீ'யார்.

இது காதல் காலம்


நன்றி - பிரேம்குமார் சண்முகமணி,
http://premkumar.wordpress.com